எங்களைப் பற்றி

     எம்மால் 2016 செப்டம்பர் 8ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘தமிழ்அகராதி.காம்’ (www.tamilagarathii.com) இணையதளம் அனைத்து தமிழ் சொற்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

     இந்த தளத்தில் சொற்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தாங்கள் அறிந்த சொற்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.

     இது மிகப்பெரிய திட்டம், இதுவரை யாரும் செய்யத் துணியாத திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம், இவையெல்லாவற்றிற்கும் மேலாக, பணமோ, பாராட்டோ கிடைக்காத திட்டம் என்பதால், வாசகர்களின் ஒத்துழைப்பே சிறந்த பாராட்டாகவும், அவர்கள் அளிக்கும் ஒவ்வொரு சொற்கள் குறித்த விவரமுமே, பணமுடிப்பாகவும் கொள்வேன். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தாங்கள் அறியும் தமிழ்ச் சொற்கள் குறித்த விவரங்களை அளித்து உதவ வேண்டுகிறேன். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

அன்புடன்
கோ.சந்திரசேகரன்